சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், திருட்டில் ஈடுப்பட்ட கருணாநிதி என்ற இளைஞரை கைது செய்து 5 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.