கன்னியாகுமரி-நெல்லை வழித்தடத்தில் தண்டவாளத்தில் பாறாங்கல்லை கைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த மாதம் 2ம் தேதி ரயிலை கவிழ்க்க சதி நடந்த நிலையில் சாதுர்யமாக செயல்பட்டு ஓட்டுனர் ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் தெரிசனங்கோப்பு பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மதுபோதையில் பாறாங்கல்லை தண்டவாளத்தில் வைத்தது தெரியவந்துள்ளது.