வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். வேப்பூர் கிராம நிர்வாக அலுவலராக உள்ள கோபி அதே பகுதியை சேர்ந்த நிஜாமுதினிடம் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து நிஜாமுதின் அளித்த தகவலையடுத்து அங்கு விரைந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கோபியை கையும் களவுமாக பிடித்தனர்.