திருவண்ணாமலை அருகே கட்டட தொழிலாளியை லாரி ஏற்றி படுகொலை செய்ததாக ஒருவரை கைது செய்த போலீசார், தலைமறைவான நபரை தேடி வருகின்றனர். வடகல்பாக்கம் பகுதியை சேர்ந்த திருப்பதி மற்றும் புண்ணியகோடி இடையே இடத்தகராறு இருந்து வந்த நிலையில், திடீரென வாக்குவாதம் முற்றி திருப்பதி மீது புண்ணியகோடி லாரியை ஏற்றி கொலை செய்தார்.