கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே துணை வட்டாட்சியர் கையெழுத்தை போலியாக போட்டு பத்திரப் பதிவு செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். புத்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி, நத்தம் புறம்போக்கு இடத்தை மண்டல துணை வட்டாட்சியர் கையெழுத்தை போட்டு ஏழுமலை என்பவருக்கு விற்பனை செய்து, அதை பதிவேட்டிலும் திருத்தம் செய்தார்.