திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். தொடர் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் வந்த நிலையில், தனிபடை அமைத்த போலீசார் பெண் உட்பட ஆறு பேரை கைது செய்து 26 சவரன் தங்க நகையை கைப்பற்றினர்.