திருப்பத்தூர் அருகே மருத்துவம் படிக்காமலேயே சிகிச்சை அளித்து வந்த போலி பெண் மருத்துவரை போலீசார் கைது செய்தனர். மரிமாணிகுப்பம் கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் பெண் ஒருவர் அலோபதி முறையில் மருத்துவம் பார்ப்பதாக வந்த தகவலின் பேரில், அங்கு சென்ற திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர், அதே பகுதியை சேர்ந்த கோகிலா என்பவர் நடத்தி வந்த கிளினிக்கிற்கு சீல் வைத்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.