நாமக்கலில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதில் சேலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ரகுநாத் என்பவர் ஒடிசாவிலிருந்து கடத்தி வந்த கஞ்சாவை மாணவன் பாலாஜி, மற்றும் இறையன்பு வாங்கி சென்று மற்ற மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் படி கஞ்சாவுடன் 4 மாணவர்களை பிடித்தனர்.