நெல்லையில் ஆன்லைனில் போதை மாத்திரைகள் வாங்கி பயன்படுத்தி வந்தாக மூன்று சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர். நகர் பகுதியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது பைக்கில் சென்ற 3 சிறுவர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த 85 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், புனேயில் இருந்து ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியும், அதனை சிலருக்கு விற்பனையும் செய்ததும் தெரியவந்தது.