சென்னை தாம்பரம் அருகே மூதாட்டியை கொடூரமாக தாக்கி தங்க சங்கிலியை பறித்து சென்ற கால் டாக்ஸி ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். வெங்கம்பாக்கத்தில் வசித்து வரும் கிரிஜா என்பவர், வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்த போது, அங்கு வந்த ஓட்டுநர் செந்தில் குமார் குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து அவரை தாக்கிவிட்டு 12 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினார்.