சென்னை சித்தாலப்பாக்கம் அருகே தனியார் பட்டா இடத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து மண் திருட்டில் ஈடுபட்டதாக திமுகவை சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவரை போலீஸார் கைது செய்தனர். ஒட்டியம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லோகிதாஸ், சங்கராபுரத்தை சேர்ந்த கண்ணன் மற்றும், வியாசர்பாடியை சேர்ந்த ராபர்ட் கென்னடி ஆகியோருக்கு சொந்தமான இடத்தில் கிணறும், அருகில் பெரிய பள்ளமும் தோண்டி 300-க்கும் மேற்பட்ட லாரிகள் மண்ணை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில், மண் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் மற்றும் டாரஸ் லாரிகளையும், பொக்லைன் இயந்திரத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.