நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருமண நிகழ்வை மட்டுமே குறி வைத்து கொள்ளையடிக்கும் தந்தை,மகனை போலீசார் கைது செய்தனர். இருபத்து ஆறரை சவரன் தங்க நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் கொள்ளை போனதாக, காவல் நிலையத்தில் கல்யாண வீட்டார் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாலமுருகன் மற்றும் அவரது மகன் ஹரிகிருஷ்ணனை கைது செய்தனர்.