தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நான்கரை லட்சம் மோசடி செய்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். பாஜகவின் உத்தமபாளையம் மண்டல செயலாளராக பதவி வகித்து வரும் மாரிராஜா, சின்னமனூரை சேர்ந்த அய்யனார் என்பவரது மனைவி செல்லமணியிடம் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இரு தவணைகளாக 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் சின்னமனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் மாரிராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.