கோவை தமிழக - கேரள எல்லை சோதனை சாவடிகளில் லஞ்சம் வாங்கிய மூன்று வனக்காவலர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். கோழி எருவை லாரி மூலம் எடுத்து செல்லும்போது, ஆனைகட்டி சாலையில் உள்ள மாங்கரை மற்றும் ஆனைகட்டி சோதனை சாவடிகளில் லஞ்சம் கேட்பதாக மதுக்கரையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அளித்தார். இதனையடுத்து அங்கு கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து பணத்தை வாங்கிய வன காவலர்கள் செல்வகுமார், சதீஷ்குமார் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரை கைது செய்தனர்.