கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். ஊத்தங்கரை கல்லாவி பிரிவு சாலை பகுதியில் மினி வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், 30 முட்டைகள் அடங்கிய ஒரு அட்டை 100 ரூபாய் என கூவி கூவி விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சமூக ஆர்வலர் ஒருவர், முட்டையில் அரசு முத்திரை இருப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற போலீசார் முட்டைகளை பறிமுதல் செய்து விசாரித்ததில், பள்ளிகளுக்கு அனுப்பப்படும் மூட்டைகளில் தரம் குறைவு என தள்ளுபடி செய்யப்படுவதை குறைந்த விலைக்கு வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.