ஈரோட்டில் பிடிக்க முயன்ற காவலரை விஷமுள்ள நாகம் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் பாம்பு புகுந்துவிட்டதாக கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பாம்பை பிடிக்க ராமசாமி என்ற காவலர் வந்தார். ஐந்து அடி நீளம் கொண்டு பாம்பு இருப்பதை கண்ட அவர் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சிறு குச்சியை வைத்து பிடிக்க முயன்ற போது பாம்பு கடித்தது. அவருக்கு ஆரம்ப சுகாதார நிலையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.