திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விஷ தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதில் 16 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அலங்கியம் ஆற்றுப்பாலத்திற்கு கீழே, அமராவதி ஆற்றில் அஸ்தி கரைக்கும் நிகழ்விற்கு சென்றபோது, கூட்டமாக பறந்து வந்த தேனீக்கள் கொட்டியுள்ளது. இதுபோன்று அடிக்கடி நடப்பதால், பல்வேறு இடங்களிலும் இருக்கும் தேன்கூடுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.