பள்ளியில் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பிளஸ் 2 மாணவர்கள் மனு அளித்தனர். சேலம் மாவட்டம் அரசரமணி செட்டிப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், போதிய வகுப்பறை கட்டடங்கள், ஆய்வக வசதிகள் இல்லாததாக மனுவில் மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பள்ளி அலுவலக கட்டடத்தின் மாடியில் தற்காலிக கொட்டகை அமைத்து வகுப்பு நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள மாணவர்கள், தங்களுக்கு பிறகு வரும் மாணவர்களுக்காவது அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.