திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடிமலையில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளி விடுதியில் பிளஸ் டூ மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வேலூர் மாவட்டம் கொடிய நத்தத்தை சேர்ந்த மாணவன் யுவராஜ், தான் தங்கியிருந்த விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.