கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடத்திற்காக கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 500 கிலோ எடையில் பிளம் கேக் தயாரிக்கும் பணியில் திரளானோர் கலந்து கொண்டனர். கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்காட்லாந்து வீரர்கள் போன்ற உடையணிந்த ஹோட்டல் ஊழியர்கள், ஒயின் உள்ளிட்ட பழ ரசங்களை கொண்ட பிரம்மாண்ட பேரலை எடுத்து வந்து, அங்கு கேக் தயாரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், வால்நட் உள்ளிட்ட 20 வகையான உலர் பழங்கள் மீது பழரசத்தை ஊற்ற, வாடிக்கையாளர்கள், ஹோட்டல் ஊழியர்கள் என பலர் ஆர்வமுடன் கேக் மிக்சிங்கில் ஈடுபட்டனர். ஆட்டம், பாட்டம் என பிளம் கேக் தயாரிக்கும் பணி களைக்கட்டியது.