கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை இரவோடு இரவாக மூன்று இளைஞர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தேமுதிக சார்பில் பிளக்ஸ் பேனரை காணவில்லை என காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இளைஞர்கள் திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.