இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அமைக்கப்பட்ட, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தென்கடப்பந்தங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட பெல்லியப்பா நகரில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே குப்பைகளை தரம் பிரித்து பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது. அங்கு திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கிடங்கில் இருந்த குப்பை அரைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின.