மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்மங்குடியில் கடந்த 24 ஆண்டுகளாக சாலை அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் சேற்றில் இறங்கி நடவு நடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். செம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெருவில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். செம்மங்குடியில் உள்ள 35 பேருக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு வீடுகள் கட்டித் தரப்பட்ட இடத்தில் மட்டும் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைத்து தர கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.