பார்வை பவுண்டேஷன் சார்பில் ஒரு லட்சம் விதைபந்துகள் நடும் பணி மதுரை மாவட்டம் மேலூரில் தொடங்கியது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பசுமை திட்டத்தை செயல்படுத்தும் விதமாக பார்வை பவுண்டேஷன் சார்பில் இளம் மக்கள் இயக்கம் மூலமாக ஒரு லட்சம் விதை பந்துகள் நடும் பணி தொடங்கியது. அந்த வகையில், மேலூர் செக்போஸ்ட் நான்கு வழிச்சாலையில் இருந்து திருமங்கலம் வரை சாலையின் இருபுறத்திலும் விதை பந்துகள் நடும் பணியில் இளைஞர்கள், சிறார்கள் என பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.