நாற்று நடவு செய்யும் பணி : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மே மாதத்தில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் வருகின்ற 63 -வது மலர் கண்காட்சியை கண்டு ரசிப்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரையன்ட் பூங்காவில் முதற்கட்ட நடவு பணியானது நடைபெற்று முடிந்து பராமரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டாம் கட்ட நடவு பணியானது தொடங்கியது. இதில் கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மொத்தம் 2.5 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்ய பட்டு வருகிறது. குறிப்பாக இன்கா மேரி கோல்டு , பிரன்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், கேலன்டுலா, பேன்ஷி, பெட்டூனியா, ஜினியா போன்ற மலர் மலர் நாற்றுகள் நடவு பணி இன்று தொடங்கியது. மேலும் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக டேலியா , ஜெரேனியம், சைக்லமன்,லில்லி, போன்ற 85 வகையான விதைகளும், ஜப்பான்,அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து நாடுகளில் இருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து உற்பத்தி செய்யபட்டு கொண்டுவரப்பட்ட சுமார் 6 லட்சம் மலர் நாற்றுகள் பராமரிப்பு பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதை போல் வருகின்ற மலர் கண்காட்சிக்கு கண்ணாடி மாளிகை மற்றும் பூங்காவில் 10000 வண்ண மலர் தொட்டிகள் பராமரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்சர்வெட்டரி பகுதியில் அமைந்துள்ள அரசு ரோஜா தோட்டத்தில் 3000 மேற்பட்ட ரோஜா செடிகளுக்கு கவாத்து எடுத்து , பூஞ்சை தடுப்பு மருந்து வைக்கும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது. Related Link சாலை நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றாமல் அலட்சியம்