RSS ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரிய மனுக்களுக்கு செப்டம்பர் 24-ம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 6-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் RSS அமைப்பு அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட RSS தரப்பில் வழங்கப்பட்ட மனுக்களுக்கு எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிகாட்டியும், அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிட கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன.