தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் வரும் 21ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. முன்னதாக வரும் 19ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஆலோசனைக் கூட்டம், தற்போது 21ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக, தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு 16,500 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் வெளியாகும் என கூறப்படுகிறது.