2025 இறுதிக்குள் முதற்கட்டமாக 625 மின்சாரப் பேருந்துகளை புதிதாக வாங்கி இயக்குவதற்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. அதை தொடர்ந்து 20 டபுள் டக்கர் பேருந்துகள் உட்பட இரண்டாவது கட்டமாக 600 மின்சார பேருந்துகளை வாங்க முடிவு செய்திருப்பதாகவும் மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.