சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் பலருக்கு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். பிள்ளையார்பட்டியில் உள்ள கண்மாயில் பாரம்பரிய ஊத்தா கூடையை பயன்படுத்தி இந்த மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பெரிய கருவாட்டு மீன், கட்லா, கெழுத்தி, கெண்டை, பாப்புலெட்டு, சிலேப்பி உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன.