கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் உள்ள பகவதியம்மன் கோயிலில் நடைபெற்ற மாசிக்கொடை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கடலில் புனித நீராடியும் பொங்கல் வைத்தும் வழிபட்டனர். மேலும்,கடற்கரை பகுதியில் மீன் இறைச்சி உள்ளிட்ட பொருட்களை சமைத்து உறவினர்களுக்கு விருந்து பரிமாறி அம்மனை தரிசித்தனர்.