தை மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரையும், முருகப் பெருமானையும் வணங்கினர். அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கம்பத்திலையனார் சந்நிதி அருகில் அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் காட்சியளித்ததால், கிரிவலம் வந்து 2 சாமிகளையும் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாக ஆன்மிக பக்தர்களால் கருதப்படுகிறது.