திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கிரிவலம் முடிந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வோர் ரயில் நிலையத்தில் குவிந்தனர். விழுப்புரத்தில் இருந்து காட்பாடி மார்க்கமாக திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்காக பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.