கும்பகோணம் மாசிமக பெருவிழாவை முன்னிட்டு மகாமக திருக்குளத்தில் காலை முதல் ஏராளமானோர் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் அளித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனமும் செய்து வருகின்றனர்.