இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை, தங்கச்சிமடம் அருகே வழிமறித்த மீனவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தண்டவாளத்தி லேயே அமர்ந்திருந்தனர்.! முதலில் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்த போலீசார், பின்னர்அப்புறப்படுத்தி ரயில் போக்குவரத்தை சீராக்கினர்.