கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய சப்படியை சேர்ந்த கிராம மக்கள், தங்கள் பகுதியை சுற்றி உள்ள குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் மனு அளித்தனர். கிராமத்தை சுற்றி செயல்படும் 10 குவாரிகளால் சாலை மற்றும் வீடுகள் சேதமடைவதோடு அதிகளவில் செல்லும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.