கடலூர் மாவட்டம் புவனகிரியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் மனு கொடுத்த பெண்களுக்கு உடனடியாக பட்டா வழங்குவதாக தாசில்தார் உறுதி அளித்துள்ளார். வீடு கட்ட பட்டா வழங்குமாறு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் அப்பகுதி பெண்கள் கோரிக்கை மனு வழங்கினர். இதனையடுத்து, அப்பெண்களை அலுவலகத்திற்கு அழைத்த தாசில்தார், அவர்களுக்கு பட்டா வழங்குவதாக உறுதி அளித்தார்.