கரூர் அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி கல்லூரி மாணவர் தாக்கல் செய்த பொது நல மனு மீது பதில் மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் நதின் சூர்யா தாக்கல் செய்த பொது நல மனுவில், திருமணிலையூர் மற்றும் லைட் ஹவுஸ் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து கழிவு நீர் நேரடியாக அமராவதி ஆற்றில் கலப்பதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அமராவதி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை எவ்வாறு அனுமதிக்கின்றீர்கள் என்று மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.இதையும் படியுங்கள் : டிப்பர் லாரி மீது வேகமாக சென்ற பைக் மோதி விபத்து... 12-ம் வகுப்பு மாணவன் உட்பட 2 பேர் உயிரிழந்த சோகம்