ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, முறைகேடாக விற்க முயன்றவர்களை கைது செய்ய கோரி, மத போதகர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். சிஐஜிஎம் என்ற கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான சுமார் 2 புள்ளி 2 ஏக்கர் நிலத்தை, அங்கு பணிபுரிந்த முன்னாள் நிர்வாகிகள் தியாகராஜன், பெஞ்சமின் ஆகியோர், தனிநபர்கள் இருவரிடம் இரண்டேகால் கோடி ரூபாய் முன்பணமாக பெற்றுக் கொண்டு மோசடியாக விற்க முயன்றனர். இதனை அறிந்த மதபோதகர்கள் மற்றும் நிர்வாகிகள், கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.