அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், பொதுச் செயலாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நிராகரிக்கக் கோரிய மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2018ஆம் ஆண்டிலிருந்து சூர்யமூர்த்தி கட்சியின் உறுப்பினராக இல்லை எனவும், உறுப்பினர் அல்லாத ஒருவர் கட்சி விவகாரம் குறித்து மனுத்தாக்கல் செய்ய முடியாது எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டத்தையடுத்து மனு நிராகரிக்கப்பட்டது.