நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியை, வீட்டு வளர்ப்பு நாய் விரட்டி அடித்தது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதி, தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலை ஓரங்களில் கரடிகள் உலா வருவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில், கோத்தகிரியில் தனியார் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று உணவு தேடி உலா வந்தது. அப்போது வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று கரடியை விரட்டியகாட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றி திரியும் கரடியை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.