சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் பெருமாள் கோவிலில் இருந்து கடல் வழியாக தாழங்குப்பம் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட பெருமாளை மீனவ பெண்கள் கோவிந்தா கோஷத்துடன் வரவேற்றனர்.தாழாங்குப்பம் பகுதியில் இருந்து கடல் வழியாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெருமாள் பாதமும், குடையும் எடுத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி ராமானுஜர் சிலை மற்றும் பெருமாள் பாதத்தை பைபர் படகுகள் மூலம் முழங்க கடல் வழியாக மங்கள வாத்தியங்கள் முழங்க எடுத்துச் சென்றனர். பின்னர் தாழங்குப்பம் வந்த பெருமாளை பத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் திரண்டு வழிபட்டனர்.