வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கத்தியுடன் சென்று தகராறில் ஈடுபட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. செட்டிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வரும் இந்திரா என்பவருடைய கணவர் ரவிச்சந்திரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்பாபு என்பவருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில், காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அடிப்படை வசதிகள் குறித்த சுரேஷ் பாபு கேள்வி எழுப்பியதால் தகராறு ஏற்பட்டது.