விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியது. தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டப்பட்டு அதற்கான அனுமதி கேட்டு காவல்துறையிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விண்ணப்பத்தை பரிசீலனை செய்த காவல்துறை, மாநாட்டில் எத்தனை பேர் கலந்து கொள்வர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகளை கேட்டது.அதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்திருந்ததை ஏற்றுக்கொண்ட காவல்துறை மாநாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.