திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த எருமை வெட்டி கிராமத்தில் பெரிய நாயகி உடனுறை பெருவுடையார் கோயிலில் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. ஊரில் உள்ள நாமக்குளத்தில் கண்டெடுக்கப்பட்டு பராமரிப்பின்றி கிடந்த சிவன் சிலையை கிராம மக்கள் மற்றும் சிவ பக்தர்கள் ஒன்றினைந்து மீட்டு திருக்கோயில் அமைத்து குடமுழுக்கு செய்த நிலையில், மண்டல நிறைவு பூஜை சிறப்பாக நடைபெற்றது.