கன்னியாகுமரி மாவட்டம் மேல்மடாலத்தில் தாது மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணவாளக்குறிச்சியில் உள்ள தாது மணல் ஆலையை மூடக்கோரியும், கொல்லங்கோடு பகுதியில் மணல் எடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.