சென்னை அடுத்த செம்பரம்பாக்கம் குடியிருப்பு பகுதியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான அளவீடு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ள நிலையில், சான்ட்ரோ சிட்டி பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.