கூரைக்குண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும் கையில் கருப்பு கொடி ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதால் 100 நாள் வேலை பறிபோகும் என்ற கிராம மக்கள் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் வீட்டு மற்றும் குடிநீர் வரி உயரும் எனக்குறி அறிவிப்பு வெளியான நாள் முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் அறிவிப்பை திரும்ப பெறக் கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.