தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தங்கள் கிராமத்திற்கு பேருந்து, குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வில்லானிபுரம் கிராமத்தில் முறையான சாலைகள் இருந்தும் பேருந்து வசதி இல்லை என கூறும் மக்கள், இதனால் இப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமம் அடைவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். அருகிலேயே வைகை அணை இருந்தாலும் தாங்கள் உப்பு நீரையே பயன்படுத்துவதாகவும், தங்கள் பகுதியில் மின்விளக்கும் சரியாக எரியவில்லை என கூறும் மக்கள், உடனடியாக இந்த அடிப்படை வசதிகளை அரசு பூர்த்தி செய்து தரும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.