தேனி மாவட்டம் சுந்தரராஜபுரத்தில் சுகாதாரமான குடிநீருக்காக மக்கள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வது குறித்து நியூஸ் தமிழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக அப்பகுதி மக்களுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சுந்தரராஜபுரம் கிராமத்தில் ஒரு சில பகுதிகளில் உப்புக்கோட்டையில் இருந்து முல்லை பெரியாறு நீர் விநியோகிக்கப்படும் நிலையில், நடுத்தெரு, இந்திரா காலனி பகுதிகளுக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து சுகாதாரமற்ற தண்ணீர் வழங்கப்படுவதாக நியூஸ் தமிழில் செய்தி வெளியானது.