நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படாததாகக் குறி காலிக்குடங்களுடன் சபாநாயகரை முற்றுகையிட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. நம்பிகுறிச்சி கிராமத்தில் கடந்த 7 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், கோட்டைக்கருங்குளம் ஊராட்சியில் திட்டப் பணிகளை தொடங்கி வைக்க சபாநாயகர் அப்பாவு வருகை தந்தபோது முற்றுகையிட முயன்றனர்.